பரீட்சை எழுதுபவர்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி.

0
78

பரீட்சை எழுதுபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

கணக்கியல் தொடர்பான பரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள் (non programmable) பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

அரச சேவைக்கான கணக்கியல் துறைசார் பரீட்சைகள் எதிர்வரும் 16 ஆம், 22 ஆம், 23 ஆம் திகதிகளில் 60 பரீட்சை நிலையங்களில் கொழும்பில் இடம்பெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், பரீட்சையின் போது கைக்கடிகாரம், கையடக்க தொலைபேசி போன்ற நவீன இலத்திரனியல் தொடர்பாடல் உபகரணங்களை பயன்படுத்துவது தடைசெய்யயப்பட்டுள்ளது.

எனவே குறித்த பரீட்சையெழுதும் மாணவர்கள் கணிப்பு பொறிகளை (non programmable) பயன்படுத்துவதனூடாக நேரவிரயத்தை குறைத்து சிறப்பாக பரீட்சையெழுத முடியும்.

Source: dailymirror

SHARE
Previous articleINSEE – IESL Concrete Challenge 2019
A Professional Project Manager having experienced in various type of projects

LEAVE A REPLY